அகதிகளும் குடியேறிகளும் — கனடாவின் பலம்! அகதிகளின் உரிமைகள் மனித உரிமைகளாகும்
கனடாவிற்கு புதிதாக வருகை தரும் தமிழ் அகதி கோரிக்கையாளர்கள், பாதுகாப்பு கோருவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு — எளிமையான, நம்பகமான, தமிழில் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்கள்.
ஒவ்வொரு காலையிலும் வாசலில் வரையப்படும் கோலம் — அன்று வருபவர்களுக்கான வரவேற்பு.
Refugee Tamil Initiative
உங்கள் அகதி கோரிக்கையை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.
Refugee Tamil Initiative (RTI) என்பது Center for Peace Canada அமைப்பின் சிறப்பு திட்டமாகும். ஒன்ராறியோவில் இயங்கும் இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, அகதிகளுக்கு ஆதரவு வழங்குதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
ஒரு பார்வையில்
- நாங்கள் எங்கே
- Center for Peace Canada அலுவலகம், 1225 Kennedy Rd, Scarborough, ON. நேரடியாக வரலாம், அல்லது நேரம் ஒதுக்கிக்கொள்ளலாம்.
- எந்த மொழியில்
- தமிழ் மற்றும் ஆங்கிலம். ஆவணங்கள், படிவங்கள் மற்றும் நடைமுறைகள் தமிழில் விளக்கப்படும்.
- யாருக்காக
- அகதி கோரிக்கையாளர்கள், பாதுகாப்பு கோருவோர், அவர்களின் குடும்பங்கள் மற்றும் புதிதாக வந்தவர்கள்.
- சட்ட உதவி
- உங்கள் குடிவரவு நிலை அறிந்து சட்ட உதவி வழங்கும் சட்டதரணிகள் உதவி பரிந்துரையில் சமர்ப்பிர்க்கபடும்
Your journey · எட்டு கட்டங்கள்
இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு அகதி கோரிக்கையும் தனித்துவமானது. இருப்பினும், கனடாவில் அகதி பாதுகாப்பைக் கோரும் அனைவரும் கடந்து செல்ல வேண்டிய சில முக்கியமான கட்டங்கள் உள்ளன. நீங்கள் தற்போது எந்த கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கனடாவின் அகதி பாதுகாப்பு முறையைப் புரிந்துகொள்ளுங்கள்
கனடாவில் அகதி பாதுகாப்பு என்றால் என்ன? யார் அகதி பாதுகாப்பைப் பெற முடியும்? உங்கள் கோரிக்கை எந்த அமைப்பின் மூலம் பரிசீலிக்கப்படும்? போன்ற அடிப்படை தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அகதி பாதுகாப்பு முறையை அறியதகவல் பெறுங்கள், தொடர்புகளை உருவாக்குங்கள், தயாராகுங்கள்
உங்கள் அகதி கோரிக்கை தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுங்கள். தேவையான சேவைகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த கட்டத்திற்குத் தயாராகுங்கள்.
தகவல் மற்றும் வளங்களைப் பெறசட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுங்கள்
உங்கள் அகதி கோரிக்கையில் சட்ட ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவம் முக்கியமானதாக இருக்கலாம். தகுதியான வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரின் உதவியை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
சட்ட உதவியைப் பற்றி அறியஉங்கள் அகதி கோரிக்கையைத் தொடங்குங்கள்
கனடாவில் அகதி பாதுகாப்பு கோரிக்கையை எவ்வாறு தொடங்குவது, எந்த ஆவணங்கள் தேவைப்படலாம், முக்கியமான காலக்கெடுக்கள் என்ன என்பவற்றை அறிந்துகொள்ளுங்கள்.
கோரிக்கையைத் தொடங்கஅகதி விசாரணைக்குத் தயாராகுங்கள்
விசாரணைக்கு முன் தேவையான ஆவணங்கள், தகவல்கள் மற்றும் பிற தயாரிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வழக்கை நேர்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கத் தயாராகுங்கள்.
விசாரணைக்குத் தயாராகஉங்கள் அகதி விசாரணையின் போது
Immigration and Refugee Board of Canada (IRB) முன் நடைபெறும் விசாரணையின் போது என்ன நடக்கும், என்ன கேள்விகள் கேட்கப்படலாம், உங்கள் உரிமைகள் என்ன என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்கள்.
விசாரணையைப் பற்றி அறியGuides and resources
கையேடு, வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் வளங்கள்
படித்துப் புரிந்துகொள்ள, கேட்டுத் தெளிவு பெற, அருகில் உள்ள உதவியைக் கண்டறிய.
அகதி வழிகாட்டி கையேடு
அகதி கோரிக்கை நடைமுறையின் முக்கிய கட்டங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், தயாராக வேண்டிய விடயங்கள் மற்றும் உதவி கிடைக்கும் இடங்கள் — ஒரே கையேட்டில்.
கையேட்டைப் பார்க்க / பதிவிறக்க Ready Toursநேரடி வழிகாட்டல் நிகழ்ச்சிகள்
அகதி விசாரணை மற்றும் மேல்முறையீட்டு நடைமுறைகள் குறித்து அறிய இலவச வழிகாட்டல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறுங்கள்.
Ready Tours பற்றி அறிய Community Resourcesசமூக வளங்கள்
கனடாவில் நீங்கள் எங்கு வசித்தாலும், உங்கள் அகதி மற்றும் குடியேற்றப் பயணத்தில் உதவக்கூடிய அமைப்புகள், சேவைகள் மற்றும் வளங்களுடன் இணையுங்கள்.
சமூக வளங்களைத் தேட Key Contactsமுக்கிய தொடர்புகள்
உங்கள் அகதி கோரிக்கை மற்றும் குடியேற்ற நிலை தொடர்பாக முக்கியமான அரசாங்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்புத் தகவல்கள்.
முக்கிய தொடர்புகளைப் பார்க்கNews and information
செய்திகளும் தகவல்களும்
கனடாவின் அகதி நடைமுறைகளில் நடக்கும் மாற்றங்கள், வழிகாட்டல்கள் மற்றும் நேர்காணல்கள் — Refugee Tamil Initiative Canada தளத்தில் இருந்து சமீபத்திய மூன்று பதிவுகள்.
Refugee Claim “Ineligible” என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
Bill C-12-ன் புதிய விதிகளால் பாதிக்கப்பட்ட அகதி கோரிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகள் கனடாவில் refugee protection கோரி விண்ணப்பித்த ஒ…
கனடாவில் அகதிகள் கட்டாயம் செய்ய வேண்டியவை
கனடாவை அடையும் ஒரு அகதி அல்லது refugee claimant-க்கு, நாட்டை அடைந்தவுடன் அவருடைய பயணம் முடிவடைவதில்லை. உண்மையில், அதன்பிறகுதான் ஒரு புதிய சட்ட, சமூக ம…
“கடலில் 76 நாட்கள்… கனடாவை அடைந்த அந்த நிமிடத்தை இன்னும் மறக்கவில்லை”
2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிக்கொண்டு MV Sun Sea என்ற சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகா…
Refugee Tamil-ன் நோக்கம்
தகவல்
சரியான, தற்போதைய, எளிய தமிழில் விளக்கப்பட்ட தகவல்கள்.
வழிகாட்டல்
அடுத்த கட்டம் என்ன என்பதை தெளிவாகச் சொல்லும் வழிகாட்டல்.
சட்ட விழிப்புணர்வு
உங்கள் உரிமைகள், கடமைகள் மற்றும் காலக்கெடுக்கள் பற்றிய தெளிவு.
சமூக இணைப்பு
அருகில் உள்ள அமைப்புகள், சேவைகள் மற்றும் மக்களுடன் இணைப்பு.
More about us
எங்களைப் பற்றியும், சொற்களைப் பற்றியும்.
எங்களைப் பற்றி
Refugee Tamil Initiative (RTI) யாருக்காக உருவாக்கப்பட்டது? ஏன் இந்த முயற்சி தேவைப்படுகிறது? Refugee Tamil தளத்தின் நோக்கம் என்ன? எவ்வாறு நாங்கள் சமூகத்திற்கு உதவுகிறோம்?
Refugee Tamil பற்றி மேலும் அறியஒரு முக்கியமான குறிப்பு: Refugee Tamil சட்ட ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உங்கள் அகதி கோரிக்கை தொடர்பான முக்கியமான சட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன், தகுதியான குடிவரவு வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரிடம் சட்ட ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
Donors and support partners
எங்களுடன் நிற்பவர்கள்
Refugee Tamil Initiative-ன் பணி, நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவு பங்காளிகளின் உதவியால் தமிழில் இலவசமாகக் கிடைக்கிறது.
உங்கள் நிறுவனம் அல்லது சமூக அமைப்பு இந்தப் பணிக்கு ஆதரவு வழங்க விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆதரவாளராக இணையCome and see us
Center for Peace Canada
திறந்திருக்கும் நேரங்களில் முன்பதிவு செய்து வரலாம். உங்களின் அடையாள ஆவணம் கொண்டுவரவும்
தமிழில் பேசக்கூடிய ஒருவர் உங்களுடன் அமர்ந்து, அடுத்த கட்டத்தை விளக்குவார்.
- Office · அலுவலகம் 1225 Kennedy Rd, Scarborough, ON
- Open · நேரம்திங்கள் – வெள்ளி · காலை 10:00 – மாலை 5:00
- Email · மின்னஞ்சல் info@refugeetamil.ca
- Languages · மொழிகள்தமிழ் · English
- Social · சமூக ஊடகம் Facebook · Instagram · TikTok · YouTube
உங்கள் குரல் முக்கியமானது.
உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.
உங்கள் எதிர்காலம் முக்கியமானது.